டிசம்பர் 2 தொடங்குகிறது 4வது காசி தமிழ் சங்கமம்!
தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தின் காசி நகரம் இடையிலான புனிதமான வரலாற்று, மொழி மற்றும் கலாசார உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியின் நான்காவது ஆண்டு விழா வரும் டிசம்பர் 2ஆம் தேதி மாபெரும் விழாவாக தொடங்கவுள்ளது. இதனை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகம் – காசி உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது:இந்து மதத்தின் மிகப் புனித நகரமாகக் கருதப்படும் வாரணாசி, தமிழர்களுக்கும் மிக நெருங்கிய ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்டது. பழங்காலம் தொடக்கம் கல்வி, மதம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இரு பிராந்தியங்களும் வலுவான தொடர்பை பேணி வந்துள்ளன. அந்த பாரம்பரியத்தை மீண்டும் வெளிப்படுத்தவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் "காசி தமிழ் சங்கமம்" 2022ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றது.
இந்த ஆண்டு நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:டிசம்பர...









