கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் – உலக நாடுகள் கடும் கண்டனம்!
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து, கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க, இஸ்ரேல் பல்வேறு நிலைகளில் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களின் மூலம் ஹமாஸ் முக்கியத் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தோஹாவில் ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், கத்தார் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், பொதுமக்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், ஹமாஸ் தனது பிரதிநிதிகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.
நெதன்யாகு விளக்கம்
கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலிலும், சமீ...









