Thursday, April 2பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

Author: daya.anand.s

பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு 58% மக்களின் ஆதரவு, வோட்டர் சர்வே முடிவு.

பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு 58% மக்களின் ஆதரவு, வோட்டர் சர்வே முடிவு.

பாரதம்
பீஹார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 65 லட்சம் பெயர்கள் நீக்கம்:சில மாதங்களில் பீஹாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இதில், வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் கொண்டவர்கள் என மொத்தம் 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்த்து, மாநிலத்தில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ள...
7 நாள் வெளிநாட்டு பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.

7 நாள் வெளிநாட்டு பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.

முக்கிய செய்தி
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலத்திற்கு அதிகளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் இன்று (ஆகஸ்ட் 30) காலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி நோக்கி புறப்பட்டார். அவர் மேற்கொள்ளும் இந்த சர்வதேச பயணம் மொத்தம் 7 நாட்கள் நீடிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனியில் 3 நாட்கள் தங்கியிருந்து அங்குள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகக் குழுக்களுடன் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார். அதன் பின்னர் செப்டம்பர் 1ஆம் தேதி அவர் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குச் செல்கிறார். லண்டன் பயணத்தின் போது, அங்குள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு கல்லூரியில் மாணவர்களிடம் உரையாற்றுகிறார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஈ.வெ.ரா பெரியார்’ படத்தை திறந்து வைக்கும் முக்கிய நிகழ்ச்...
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது டிரம்பின் ‘தனிப்பட்ட’ பகைமை காரணமாகவா? ஜெஃப்ரிஸ் அறிக்கை!

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது டிரம்பின் ‘தனிப்பட்ட’ பகைமை காரணமாகவா? ஜெஃப்ரிஸ் அறிக்கை!

பாரதம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தது, இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மத்தியஸ்தம் செய்ய அனுமதிக்கப்படாததால் அவர் "தனிப்பட்ட கோபத்தின்" விளைவாகும் என்று அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஜெஃப்ரிஸ் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஜெஃப்ரிஸ், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் அனுமதிக்கப்படாததால் இந்தியா மீது அமெரிக்கா வரிகளை விதித்ததாகக் கூறியுள்ளது. இதற்கிடையில், இந்தியா மீதான 50 சதவீத வரிகள் உட்பட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) தீர்ப்பளித்தது. அமெரிக்க ஜனாதிபதி அவற்றை விதிப்பதில் தனது அதிகாரத்தை மீறிவிட்டதாக கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் க...
இன்ஜினியரிங் கல்லூரிகளின் புதிய பாடத்திட்டத்தில் வெளிநாட்டு மொழி ஒன்று கற்றல் கட்டாயம்!

இன்ஜினியரிங் கல்லூரிகளின் புதிய பாடத்திட்டத்தில் வெளிநாட்டு மொழி ஒன்று கற்றல் கட்டாயம்!

தமிழ்நாடு
Chennai: Police personnel stand guard at the entrance of Anna University after the alleged sexual assault of its girl student, in Chennai, Thursday, Dec. 26, 2024. (PTI Photo) (PTI12_26_2024_000412B) தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளில் ஒன்றை கூடுதலாக கற்க வேண்டும் என்ற கட்டாயமும் சேர்க்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம்:அண்ணா பல்கலைக்கழகம், கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் உலகளாவிய சூழலுக்கு ஏற்ப முன்னேறவும், இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. இதற்காக கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தீவி...
சத்தீஸ்கரில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண்!

சத்தீஸ்கரில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண்!

பாரதம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அரசின் மறுவாழ்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டு பெருமளவில் சரண் அடைந்து வருகின்றனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட மொத்தம் 30 பேர் சரண் அடைந்து, தங்கள் கையிலிருந்த ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக அதிகரிக்கும் சரண்:அண்மைக்காலமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர நடவடிக்கைகளால் நக்சலைட்டுகளின் தாக்குதல்கள் குறைந்துள்ளன. துல்லியமான ரகசியத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் நடவடிக்கைகளால், பல்வேறு முகாம்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல நக்சலைட்டுகள் தங்கள் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசின் மறுவாழ்வு கொள்கையை நாடி சரண் அடையும் நிலை உருவாகியுள்ளது. துணை முதல்வரின் விளக்கம்:இச்சம்பவம் குறித்து சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா...
பள்ளிகள் ஆதார் பயோமெட்ரிக்கை தாமதமின்றி முடிக்க வேண்டும்!

பள்ளிகள் ஆதார் பயோமெட்ரிக்கை தாமதமின்றி முடிக்க வேண்டும்!

பாரதம்
5 முதல் 15 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகள்-MBU-வை சரியான நேரத்தில் உறுதி செய்யுமாறு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் - UIDAI கேட்டுக் கொண்டுள்ளது. UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி, இலக்கு வைக்கப்பட்ட MBU முகாம்களை நடத்துவதில் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 17 கோடி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு பிளஸ் தளத்தில் ஆதாரில் நிலுவையில் உள்ள MBU-வை எளிதாக்க UIDAI மற்றும் கல்வி அமைச்சகம் ஒத்துழைத்துள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு பிளஸ் என்பது பள்ளிக் கல்வி மற்றும் ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஜப்பான் மற்றும் சீனாவிற்கு பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஜப்பான் மற்றும் சீனாவிற்கு பயணம்!

பாரதம்
15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது பிரதமர் மோடியின் எட்டாவது ஜப்பான் பயணம் மற்றும் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் நடைபெறும் முதல் உச்சி மாநாடு ஆகும். இந்த பயணத்தின் போது, ​​இரு பிரதமர்களும் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான சிறப்பு உலகளாவிய கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பாய்வில் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புதுமை, மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகியவை அடங்கும். பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளையும் அவர்கள் விவாதிப்பார்கள். இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் சிறப்பு பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும். தனது பயணத்தின் இரண்டாம் கட்டத...
உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் – இந்தியாவின் ஷர்வாரி தங்கம் வென்றார்!

உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் – இந்தியாவின் ஷர்வாரி தங்கம் வென்றார்!

பாரதம்
கனடாவில் நடைபெற்று வரும் உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் இளம் வில்வித்தை வீராங்கனை ஷர்வாரி வரலாற்றுச் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அரையிறுதியில் கொரிய சாம்பியனை வீழ்த்தினார்:பெண்கள் ரிகர்வ் பிரிவில், 18 வயதுக்குட்பட்டோருக்கான தனிநபர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் 16 வயது ஷர்வாரி, உலக தரவரிசையில் ‘நம்பர்-1’ இடத்தில் இருந்த தென் கொரியாவின் கிம் மின் ஜியாங்-ஐ எதிர்கொண்டார். அசத்தலான ஆட்டம் காட்டிய அவர், 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். பைனலில் த்ரில் வெற்றி – தங்கம் இந்தியாவுக்குபைனலில், மற்றொரு தென் கொரிய வீராங்கனை கிம் இவோன் (‘நம்பர்-3’) எதிராக மோதிய ஷர்வாரி, ஆரம்பத்தில் 5-1 என முன்னிலை பெற்றார். பின்னர் போட்டி சமநிலை அடைந்து, 5-5 என்ற நிலையில் முடிந்தது. இதையடுத்து நடந்த ‘ஷூட்-ஆஃப்’ சுற்றில், ஷர்வாரி 10-9 என்ற கணக...
தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாடு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேர மழைப் பதிவுகள்:நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதில், - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது. - கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரத்தில் தலா 5 செ.மீ., - புவனகிரி, அண்ணாமலைநகர் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வரும் நாட்களின் வானிலை நிலை:வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 26, 27) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும். ...
கிட்னி விற்பனை விவகாரம் – ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவு!

கிட்னி விற்பனை விவகாரம் – ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவு!

தமிழ்நாடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக, தனி விசாரணைக்குழுவை அமைக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, விசாரணையை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் செயல்பாடுகள் நேரடியாக நீதிமன்ற கண்காணிப்பில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. பொதுநல மனுவில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள்:பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பில் தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் சில அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதால், மாநில போலீசாரால் நேர்மையான விசாரணை நடத்த இயலாது. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, விசாரணை நடத்த வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது. நீதிபதிகளின் கேள்வி – அரசின் பதில்:இந்த மனு, நீத...