அனில் அம்பானி: மோசடி வழக்கு – 35க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை! முதல் கைது நடவடிக்கை!
தொழிலதிபரான அனில் அம்பானிக்கு எதிராக, மத்திய அரசின் அமலாக்கத் துறையினர் (Enforcement Directorate - ED) நடத்திய மோசடி விசாரணையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ (SBI) வங்கி, அனில் அம்பானியை மோசடியாளர் மற்றும் குற்றவாளி என அறிவித்ததை அடுத்து, அமலாக்கத் துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கைகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அவரது சொத்துகளுக்கும் தொடர்பான 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தினர். இந்த நடவடிக்கைகள் டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை அனில் அம்பானிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அவர் பதிலளிக்க தவறினால், கட்டாய ஆஜராக்கும் நடவடிக்கையும் மே...









