செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாகப் கனடா பிரதமர் அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நீடித்துவரும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு முக்கியமான முன்னேற்றமாக, கனடா அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதனை கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று தெரிவித்தார், "செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் (UN) பாலஸ்தீன அரசை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவேண்டும் என்பதே கனடாவின் நிலைபாடாகும்".
"இரு நாடுகளுக்கும் சமநிலை வேண்டும்" — கார்னியின் வலியுறுத்தல்மார்க் கார்னி தனது உரையில், இஸ்ரேலின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கனடா உறுதியாக ஆதரிக்கிறது என்றும், அதே நேரத்தில் பாலஸ்தீனமும் ஒரு சுயாதீன, இறையாண்மை உடைய நாடாக அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் உரிமை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண, கனடா தொடர்ந்து பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது என்ற...









