“உணவுக்காக கைநீட்டும் மனிதர்களை கொல்லும் அபாயம்!” இஸ்ரேலின் உணவு விநியோகம், 24 நாடுகள் கண்டனம்!
இஸ்ரேல் அரசு காஸாவில் மேற்கொண்டு வரும் உணவுப் பொருள் விநியோக முறை அபாயமாகவும், மனிதாபிமானக் கொள்கைகளை மீறுவதாகவும், இது அப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற செயலாகவும் உள்ளதாக "24 நாடுகளின் கூட்டமைப்பு" கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கண்டன அறிக்கையில் பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட முக்கிய நாடுகள் கலந்து கொண்டுள்ளன. “காஸாவில் நடைபெறும் போர் உடனடியாக நிறைவு பெற வேண்டும். அங்கு வாழும் பொதுமக்களின் துயரம் ஏற்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மக்கள், குறிப்பாக குழந்தைகள் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற போராடும் சூழ்நிலையில், இஸ்ரேல் அரசு மேற்கொள்ளும் உணவு விநியோகக் முறைகள் அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன,” என்று அறிக்கையில் கண்டிக்கப்படுகிறது.
மேலும், “காஸா மக்களின் கௌரவத்தையும் மனித உரிமையையும் பறிக்கும் வக...









