தமிழகத்தில் போலீஸ் ‘தனிப்படைகள்’ ஒட்டுமொத்தமாக கலைப்பு – டிஜிபி உத்தரவு
திருப்புவனத்தில் நடந்த அஜித்குமார் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காவல்துறை நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையை கடுமையாக சீர்குலைத்திருப்பதுடன், அரசு மீது கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
சம்பவத்தின் பின்னணி பின்வருமாறு:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில், நகைகள் திருடுபோனதாக வாடிக்கையாளர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து, அந்தத் தொடர்பில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்தக் காயங்களால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தமிழக அரசு பெரும் பதற்றத்திற்குள்ளானது. ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக ஊடகங...









