உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடம், உக்ரைன் முதலிடம்!
உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என சமீபத்தில் வெளியாகியுள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியா, தற்போதைய பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. அதன் முதலிடத்தை கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் கைப்பற்றியுள்ளது.
ஆயுத இறக்குமதி நிலவரம் – 2020 முதல் 2024 வரை:ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் செயல்படும் SIPRI (Stockholm International Peace Research Institute) நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த சர்வதேச போக்குகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனம் 2020 முதல் 2024 வரை ஆயுத இறக்குமதியில் முன்னணியில் உள்ள 10 நாடுகளைப் பற்றிய புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகளாவிய ஆயுத இறக்கு...









