தென் கொரிய திடீர் தேர்தல் : புதிய ஜனாதிபதி லீ ஜே-மியுங்
தென் கொரியாவில் கடந்த ஆறு மாதங்களாக மிகவும் கொந்தளிப்பான அரசியல் காலகட்டம் இருந்து வந்தது. நடைபெற்ற ஒரு திடீர் தேர்தலுக்குப் பிறகு, லீ ஜே-மியுங்கை அதன் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. 93% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், லீ 48.67% வாக்குகளைப் பெற்றார். அவரது எதிராளியான மக்கள் சக்தி கட்சியின் கிம் மூன்-சூ, தோல்வியை ஒப்புக்கொண்டு லீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக நீடித்த அமைதியின்மை மற்றும் நாட்டின் வரலாற்றில் மிகக் குறுகிய கால இராணுவச் சட்டத்தைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 80% வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அரசியல் மாற்றத்திற்கான வலுவான செய்தியை பொதுமக்கள் வழங்கியுள்ளனர் என்றே கூறவேண்டும்.
சியோலில் நன்றி தெரிவித்த லீ, வட கொரியாவுடன் அமைதியான பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்தார். எதிர்கால ...









