துருக்கியில் இன்று உக்ரைன்–ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பம்!
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் உக்ரைன்–ரஷ்யா போர் குறித்து, போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து முக்கியமான நேரடி பேச்சுவார்த்தை இன்று (மே 15) துருக்கியில் நடைபெறவுள்ளது. திடீர் திருப்பமாக டிரம்பும், புடினும் நேரில் பங்கேற்கவில்லை என்று அறியப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு புடின் தனது பிரதிநிதிகளை அனுப்புவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெலன்ஸ்கி தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ரஷ்யாவிலிருந்து யார் வருகிறார்கள் என்பதை கண்ட பிறகு நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்கிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும், "துருக்கியில் நடைபெறும் இந்த சந்திப்பில் டிரம்ப் பங்கேற்கும் வாய்ப்பைப் பற்றி நான் கேட்டுள்ளேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெலன்ஸ்கி மேலும், “ரஷ்யா தொடர்ந்து போரை நீட்டிக்கிறது, மக்கள் உயிரிழப்பை நிறுத்த அமைதி தேவைப்படுகிறது. போரை நிறுத்த ரஷ்யா மீது...









