பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடகங்களை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.
இந்தியா ஒன்பது பயங்கரவாத தளங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு, ஐந்து இந்திய ஜெட் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. இப்போது இந்தக் கூற்றுக்களை ஆதரிக்க, பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் சமூக ஊடகப் பதிவுகளை ஆதாரமாகக் காட்டுகிறார்.
இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக கூறியதை உறுதிப்படுத்த ஆதாரம் உள்ளதா என்று பத்திரிகையாளர் கேட்டார். அப்போதுதான் அவர், "இது சமூக ஊடகங்கள் முழுவதும் பரவி வருகிறது" என்று கூறியிருக்கார்.
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்தத் தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஏற்பாடு செய்தது.
புதன்கிழமை (மே 7) ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு உரை...








