திருப்பூரில் வங்க தேசத்தினர் 130 பேர் கைது! காவல்துறையின் வேட்டை தொடர்கிறது!
தொழிற்சாலைகளின் மையமாகத் திகழும் திருப்பூர், இன்று தொழிலாளர்களால் நிரம்பிய நகரமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களைத் தவிர, உத்தரபிரதேசம், பீஹார், ஒடிசா, மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தவிர, வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பூரில் தங்கியுள்ளனர்.
தொழிலாளர்களின் பெரும் வரவால், திருப்பூர் ஒரு வேலைவாய்ப்பு மையமாக மட்டுமல்லாமல், சில குற்றவாளிகளுக்கான "புகலிடமாக" மாறி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். "தொழிலாளர்கள்" என்ற போர்வையில் சிலர், முறைப்படியான ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கி, கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2025 வரை, பல்லடம், மங்கலம், நல்லூர், காலேஜ் ரோடு, வாவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை...









