பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சியின் நிழல்? – கார்கில் வரலாறு மீண்டும் உருவெடுக்கிறதா?
கடந்த காலத்தில் கார்கில் போரைத் தூண்டிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்பின் நடைமுறை, இப்போது மீண்டும் பாகிஸ்தானில் திரும்ப வந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1999ம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிராக கார்கில் போரைத் தூண்டிய பர்வேஸ் முஷாரப், பின்னர் தன் அரசியல் எதிரியைப் பதவியில் இருந்து கீழே தள்ளி, நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்தியா மீது போர்கொடி தூக்கி, உள்ளூர் மக்களிடையே தேசிய உணர்வை தூண்டி, தன் ஆட்சிக்கே தளம் பதித்தார். போர் வெற்றி பெறவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்குள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த அவரால் முடிந்தது.
இன்று, அந்த வரலாறு புதிய வடிவத்தில் மீண்டும் உருவெடுக்கப்படுவதாக சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருப்பவர் சையது அசிம் முனீர். அவர் இந்தியாவை எதிரியாகக் காட்டி, பாகிஸ்தான் மக்களிடம் தேசிய உணர்வை தூண்டி, ஷாபாஸ...









