குரூப் 4 தேர்வு – ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாநிலம் முழுவதும் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தேர்வு வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலாக மூன்று மணி நேரம் நடைபெறும். இந்த தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் (VAO) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24ஆம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி.வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பயிற்சி தரமானோர் குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி ப...









