பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13,500 கோடி மோசடி: முக்கிய குற்றவாளி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார்.
வங்கி மோசடி தொடர்பாக இந்திய நிறுவனங்களின் ஒப்படைப்பு கோரிக்கையின் பேரில், தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை பிடித்து நாடு கடத்தும் இந்தியாவின் முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, பெல்ஜிய அதிகாரிகள் சனிக்கிழமை அவரை கைது செய்து காவலில் எடுத்தனர்.
மெகுல் சோக்ஸி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஆனால் அவரை நாடு கடத்துவதில் இந்தியா சவால்களை எதிர்கொள்ளக்கூடும். உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி சோக்ஸியின் சட்டக் குழு நாடுகடத்தலை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், சிபிஐ தனது நாடுகடத்தல் கோரிக்கையை நிறைவேற்ற பெல்ஜிய அதிகாரிகளுடன் இப்போது தொடர்பில் உள்ளது.
இணையத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, மெஹுல் சோக்ஸி 1959 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மும்பையில் பிறந்தார், ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கல்வி பயின்றார். இவருக்க...









