ஈரான் மீதான கடும் எச்சரிக்கை – டிரம்பின் கடைசி வார்னிங்!
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய வேண்டியது அவசியம், இல்லையெனில் இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொருளாதார தடைகளை அதிகரித்து ஈரானை தனிமைப்படுத்துவோம் என அவர் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து, போர் வெடிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.
அணுசக்தி திட்டத்தில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் அதனை எதிர்த்து வருகிறார். ஈரான் அணுஆயுதம் உருவாக்கக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடு. ஆனால், அமெரிக்காவுடன் உறவு மோசமடைவதால், நாட்டின் பாதுகாப்புக்காக அணுஆயுதம் அவசியம் என ஈரான் கருதுகிறது. இதனால், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என டிரம்ப் தீர்மானித்தார்.ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி மற்றும் அதிபர் மசூத் பெசஷ்கியான்...









