டாஸ்மாக் ரெய்டு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவு
தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனைசமீபத்தில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ₹1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
தமிழக அரசின் எதிர்ப்புஇந்த நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அவற்றில், மாநிலத்தில் விசாரணை நடத்தும் முன், அமலாக்கத்துறை மாநில அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால், இது செய்யப்படவில்லை. சோதனை என்ற பெயரில், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டனர். பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பான அமலாக்கத்துறையின் ECIR...









