பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீட்புப் பணி நிறைவு பெற்றது.
செவ்வாய்க்கிழமை தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலன் பாஸில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பலூச் விடுதலை இராணுவம் (BLA) போராளிகளால் கடத்தப்பட்டு, பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
பிரிவினைவாத போராளிகள் ரயில் பாதையின் ஒரு பகுதியை குண்டுவீசித் தாக்கி, 440 பயணிகளுடன் பயணித்த ரயிலில் புகுந்தனர். பின்னர், பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றது. போராளிகள் பயணிகளை மனித கேடயங்களாகப் பயன்படுத்தினர்.
பிணைக் கைதிகள் படிப்படியாக மீட்பு நடவடிக்கையின் மூலம் விடுவிக்கப்பட்டனர். ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் அதிகாரிகள் புதன்கிழமை (மார்ச் 12) நடவடிக்கையை முடித்துவிட்டதாகவும், 33 பலூச் போராளிகளும் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் கூறினார். இதில் 21 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இருப்பினும், பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று...









