அமெரிக்காவுக்கு எதிராக வெனிசுவேலா போரிட முடியுமா? ரஷ்ய ஆயுதங்கள் பாதுகாக்குமா?
லத்தீன் அமெரிக்கா அருகிலுள்ள கடல் எல்லையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு வந்தடைந்தது, அமெரிக்கா–வெனிசுவேலா உறவுகளில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. 1989 பனாமா படையெடுப்புக்குப் பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்ட மிகப்பெரிய ராணுவ முன்னெடுப்பாக இது கருதப்படுகிறது.
மதுரோ மீது அமெரிக்க குற்றச்சாட்டு – வெனிசுவேலாவின் மறுப்பு:வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறார். இத்தகைய குற்றச்சாட்டுகளின் பின்னணியில் அமெரிக்க போர்க் கப்பல் கரையோரத்தில் நிலைநிறுத்தப்பட்டதை, மதுரோ அரசு ஒரு "ராணுவ அழுத்தத் திட்டம்" என்கிறார்.
பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவின் நில, கடல், வான், நதி மற்றும் ஏவுகணை படைகள் அனைத்தும் "பெரிய அளவில்" நட...








