இந்திய ரயில்வே: 74,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 74,000 பெட்டிகளிலும்(Coach) கதவுகளுக்கு அருகிலுள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்களை இந்திய ரயில்வே நிறுவும். பயணிகள் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை சோதனை முறையில் பொருத்துவது நேர்மறையான முடிவுகளை அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும். குற்றவாளிகளும், ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களும் ஏமாறும் பயணிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேமராக்கள் மூலம், இதுபோன்ற சம்பவங்கள் கணிசமாகக் குறையும். பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்க, கதவுகளுக்கு அருகிலுள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்" என்று ரயில்வே அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) கூறப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணை அமைச்சர் ர...









