மும்பையில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு வந்த குழந்தைகள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். நடந்தது என்ன? விவரங்கள்.
படம்: RA ஸ்டுடியோ மற்றும் கொல்லப்பட்ட ரோஹித் ஆர்யா
நேற்று வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025, மும்பையில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளுக்கு ஒரு சோதனை தினமாக மாறியது.
நடிகராகும் கனவுகளோடு 100 ம் மேற்பட்ட குழந்தைகள் வரவிருக்கும் ஒரு வலைத் தொடருக்கான(Web Series) ஆடிஷனுக்கு மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ஒரு ஆடிஷன் ஸ்டுடியோவுக்கு சென்றனர்.அங்கு அவர்கள் RA ஸ்டுடியோவில் ஊழியராகவும், ஒரு YouTube சேனலை நடத்தி வந்த ரோஹித் ஆர்யாவைச் சந்தித்தனர்.
காலை 9 மணி முதல் பல மணி நேரம் ஆடிஷன்கள் நடந்தன, மதியம் 1 மணியளவில் அந்த ரோஹித் ஆர்யா 80 மேற்பட்ட குழந்தைகளை வெளியேறச் சொன்னார். ஆனால், ஆர்யா 17 குழந்தைகளை விடவில்லை, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவர்களை பிணைக் கைதிகளாக வைத்திருந்தார்.
மன உளைச்சலுக்கு ஆளான பெற்றோர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர், அவர்கள் அனைத்து குழந்தைக...









